தமிழ் நாடு முதலமைச்சராக பதவியேற்றுள்ள தவெக தலைவர் விஜயை பல்வேறு தரப்பினரும் சந்தித்து வருகின்றனர். அந்த வகையில் முதலமைச்சர் விஜயை தற்போது நடிகர் சிவகார்த்திகேயன் சந்தித்துள்ளார். இது தொடர்பாக சிவகார்த்திகேயன் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “மக்களின் மனங்களை மகிழ்விப்பதில் தொடங்கி மாநிலத்தையே வழிநடத்தும் நிலை வரை… சில பயணங்கள் உண்மையிலேயே அசாதாரணமானவை. தமிழகத்தின் மாண்புமிகு முதலமைச்சர் திரு. சி. ஜோசப் விஜய் அவர்களைச் சந்தித்தது ஒரு பெருமைக்குரிய தருணம். ரசிகன் எக்ஸ்பிரஸ்’ முதல் ‘விஜய் அவார்ட்ஸ்’ மேடை வரை, ‘GOAT’ திரைப்படத்தில் இணைந்து நடித்தது வரை… மற்றும் இப்போது உங்களுடன் இந்தத் தருணம். இது எப்போதும் மிகவும் சிறப்பானதாகவே இருக்கும். அந்த சகோதரத்துவம், அந்த பிணைப்பு… அது தொடர்கிறது… ” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

