பிரபலமான சொகுசு கார் மற்றும் விமான எஞ்சின் தயாரிப்பு நிறுவனமான ரோல்ஸ் ராய்ஸ், இந்தியாவில் விமான எஞ்சின்கள் தயாரிக்கும் தொழிற்சாலை ஒன்றை தொடங்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த தொழிற்சாலையில் அர்ஜுன் டேங்கிற்கான எஞ்சின்கள் மற்றும் எதிர்காலத்தில் உருவாக்கப்படும் போர் விமானங்களுக்கான எஞ்சின்களையும் தயாரிக்க திட்டம் உள்ளது. இதற்காக இந்திய பாதுகாப்புத் துறையைச் சேர்ந்த நிறுவனங்களுடன் புதிய ஒப்பந்தங்களை இறுதி செய்ய ரோல்ஸ் ராய்ஸ் நடவடிக்கை எடுத்து வருகிறது.

