ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் சூர்யா நடிக்கும் ‘சூர்யா 45’ படத்தில் நடிகை திரிஷா நடிக்கவுள்ளதை படக்குழு உறுதிசெய்துள்ளது.
சூர்யா நடிப்பில் பிரம்மாண்டமாக உருவான “கங்குவா” வெளியாகி எதிர்பார்த்த வரவேற்பை பெறாமல் போனது. “கங்குவா”வை தொடர்ந்து கார்த்திக் சுப்புராஜ் படத்தில் நடித்து முடித்த நடிகர் சூர்யா, தற்போது தனது 45வது படத்தில் நடித்து வருகிறார். ’சூர்யா45’ படத்தை நடிகரும், இயக்குநருமான ஆர்.ஜே.பாலாஜி இயக்கி வருகிறார். அண்மையில், கோவை மாவட்டம் ஆனைமலை மாசாணியம்மன் கோயிலில் இப்படத்துக்கான பூஜை நடத்தப்பட்டு, அதே பகுதியில் படப்பிடிப்பும் தொடங்கியது.
லியோ”, “கோட்” படத்தில் மட்டும் பாடலுக்கு நடனம், அஜித்துடன் பேக் டு பேக் “விடாமுயற்சி”, “குட் பேட் அக்லி”, கமல்ஹாசனின் “தக்ஸ் லைஃப்” படங்களில் நடித்து வரும் திரிஷா தற்போது சூர்யாவின் 45வது படத்தில் நடிக்கவிருப்பது ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்த அதிகாரபூர்வ போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.