கார்கிவ் நகரில் ரஷ்யா சரமாரி ஏவுகணை தாக்குதல், 3பேர் பலி; உக்ரைனில் பதற்றம்

அரசியல் உக்ரைன் உலகம் கடந்த நிகழ்ச்சிகள் செய்திகள் நிகழ்வுகள் மற்றவை முதன்மை செய்தி ரஷ்யா விபத்துகள்

உக்ரைனின் கார்கிவ் நகரில் ரஷ்யா சரமாரி ஏவுகணை தாக்குதல் நடாத்தியுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. உக்ரைன் மீது கடந்த 2022 பிப்ரவரி 24ம் தேதி ரஷ்யா போர் தொடுத்த நிலையில் 2 ஆண்டுகளை கடந்தும் போர் நீடிக்கிறது. இந்த போரில் உக்ரைன் தலைநகர் கீவ் உள்பட பல்வேறு முக்கிய நகரங்கள் சின்னாபின்னமாகி விட்டன. அப்பாவி மக்கள் உயிரிழப்பதும் நீடிக்கிறது. மேற்கத்திய நாடுகள் வழங்கும் ஆயுத உதவிகளால் ரஷ்யாவுக்கு உக்ரைன் பதிலடி கொடுத்து வருகிறது. உக்ரைன் – ரஷ்யா போரை முடிவுக்கு கொண்டு வர ஐநா மற்றும் சர்வதேச நாடுகள் எடுக்கும் முயற்சி இன்னும் பலனளிக்கவில்லை.உக்ரைன் நாட்டின் 2-வது மிகப்பெரிய நகரமான கார்கிவ் மீது ரஷ்யா தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. இந்நிலையில் இன்று சரமாரியாக ஏவுகணை தாக்குதல் நடத்தியதாக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார். இந்த தாக்குதலில் 3 பேர் பரிதாபமாக கொல்லப்பட்டுள்ளனர். 19 பேர் காயம் அடைந்துள்ளனர் எனத் தெரிவித்துள்ளார். மக்கள் வசிக்கும் கட்டடத்தில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. 16 ஏவுகணைகள் மற்றும் 13 டிரோன்கள் மூலம் எரிசக்தி மீது 8 தாக்குதல் நடத்தியதாக உக்ரைன் தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *