சபரிமலை ஐயப்பன் கோயிலில் நாளைய உடனடி தரிசன (Spot Booking) முன்பதிவு எண்ணிக்கை 5,000 ஆகக் குறைக்கப்பட்டுள்ளது.முதலில் நாளை முதல் இந்த எண்ணிக்கையை 10,000 ஆக உயர்த்த முடிவு செய்யப்பட்டிருந்தாலும், பக்தர்கள் கூட்டம் அதிகரித்ததால் மீண்டும் 5,000 ஆக குறைத்துள்ளதாக நிர்வாகம் தெரிவித்துள்ளது.இந்த மண்டல காலத்தில், முந்தைய ஆண்டுகளை விட பக்தர்கள் வருகை அதிகரித்துள்ளதால் தினமும் ஆன்லைனில் 70,000 பேருக்கும், உடனடி முன்பதிவு மூலம் 20,000 பேருக்கும் தரிசன அனுமதி வழங்கப்பட்டு வந்தது.ஆனால், உடனடி முன்பதிவு கவுண்டர்களில் பக்தர்கள் கூட்டம் இருமடங்காக அதிகரித்து கடும் நெரிசல் ஏற்பட்டது. இதையடுத்து, கேரள உயர்நீதிமன்ற உத்தரவின்படி இந்த எண்ணிக்கை தற்காலிகமாக 5,000 ஆக குறைக்கப்பட்டது.இந்த முடிவால் கடந்த சில நாட்களாக நெரிசல் குறைந்து, பக்தர்கள் சிரமமின்றி தரிசனம் செய்து வருகின்றனர். நிலைமையைப் பொறுத்து ஒவ்வொரு நாளும் முன்பதிவு எண்ணிக்கையை மாற்றிக்கொள்ள நீதிமன்றம் அனுமதியும் வழங்கியுள்ளது.தற்போதைய சூழலில், பக்தர்கள் வருகை மீண்டும் அதிகரித்துள்ளதால், நாளைய உடனடி தரிசன முன்பதிவு எண்ணிக்கை 5,000 ஆகவே நிர்ணயிக்கப்பட்டுள்ளது.கடந்த 9 நாட்களில் மட்டும் சபரிமலையில் 7.25 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் தரிசனம் செய்துள்ளனர்.

