ஆஸ்திரேலிய அரசு, 16 வயதுக்கு குறைவான குழந்தைகள் எந்த சமூக ஊடகத்தையும் பயன்படுத்தக் கூடாது என்று புதிய சட்டத்தை அறிவித்துள்ளது. இது 2025 டிசம்பர் 10 முதல் அமலுக்கு வருகிறது.உலக நாடுகளில் இதுபோன்ற முடிவு முதன்முறையாக எடுக்கப்படுவதால், இது பெரிய விவாதத்தை கிளப்பி வருகிறது. குழந்தைகளை சமூக ஊடக ஆபத்துகளிலிருந்து பாதுகாப்பது இந்த சட்டத்தின் நோக்கமாகும். ஆனால், இந்த மாற்றத்தால் சமூக ஊடக துறையில் வேலைசெய்யும் பலரும் கவலைப்படுகின்றனர்.23 மில்லியன் பின்தொடர்பாளர்கள் உள்ள யூட்யூபர் ஜோர்டன் பார்கிலே, இந்த சட்டம் அமல்பட்டால் தன் வேலைகள் பாதிக்கப்படும் என கூறி, வெளிநாட்டுக்கு குடிபெயர்வதையும் யோசித்து வருகிறார். ஆஸ்திரேலியாவின் சமூக ஊடகத் துறை வருடத்திற்கு 9 பில்லியன் வருமானம் தரும் நிலையில், இந்த கட்டுப்பாட்டால் பார்வையாளர்கள் மற்றும் விளம்பர வருவாய் குறையலாம் என்று நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.சட்டம் அமலான பிறகு, 16 வயதிற்குள் இருக்கும் குழந்தைகளின் சமூக ஊடக கணக்குகள் முடக்கப்படலாம். இதனால் யூட்யூப், டிக்டாக் போன்ற தளங்களில் பார்வையாளர்கள் குறைகலாம். குறிப்பாக 15 வயதான ‘Food Vlogger’ டிமி ஹெரிஸ்லிம் போன்ற இளம் கலைஞர்கள் அதிகம் பாதிக்கப்படுவார்கள்.“என் கணக்கு முடக்கப்பட்டால், நான் புதிய கணக்கைத் தான் தொடங்க வேண்டும்,” என்று டிமி கூறியுள்ளார்.இந்த புதிய சட்டத்தால், குழந்தை பார்வையாளர்களை நம்பி உள்ளடக்கம் தயாரித்து வந்தகிரியேட்டர்கள், மைக்ரோ-இன்ஃப்ளூயன்சர்கள், பிரபலங்கள் என பலரும் நஷ்டத்தை சந்திக்க நேரிடலாம். நல்ல மற்றும் பயனுள்ள குழந்தைகள் சார்ந்த கண்டென்ட் தயாரிப்பவர்களும் பாதிக்கப்படுவார்கள் என்று தெரிவிக்கப்படுகிறது.

