திருவண்ணாமலை கார்த்திகை தீபத்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

ஆன்மீக தளங்கள் ஆன்மீகம் கோயில்கள் சிறப்பு செய்திகள் தமிழ்நாடு திருவிழாக்கள் மற்றும் நிகழ்வுகள் பண்டிகைகள் மற்றும் கொண்டாட்டங்கள்

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில், திருக்கார்த்திகை தீபத்திருவிழா இன்று அதிகாலை கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது. 63 அடி உயரம் கொண்ட தங்கக்கொடி மரத்தில், காலை 6.00 முதல் 7.25 மணிக்குள் சிவாச்சாரியர்கள் வேதமந்திரங்கள் முழங்க கொடியை ஏற்றினர். பெருமளவில் திரண்டிருந்த பக்தர்கள் “அண்ணாமலையாருக்கு அரோகரா” என்ற கோஷம் விண்ணை முட்டியது. 10 நாள் நடைபெறும் திருவிழாவில் முக்கிய நிகழ்வான மகா ரத தேரோட்டம்,நவம்பர் 30ஆம் தேதி நடைபெறுகிறது. டிசம்பர் 3ஆம் தேதி காலை கருவறையில் பரணி தீபம் ஏற்றப்பட்டு மாலை 6 மணிக்கு, 2688 அடி உயரமுள்ள திருவண்ணாமலை உச்சியில் மகா தீபம் வெகு விமர்சையாக நடைபெறவுள்ளது.
தீபத்திருவிழாவைக் காண ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தரும் நிலையில், திருவண்ணாமலை நகரம் முழுவதும் விழா கோலம் பூண்டுள்ளது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *