சபரிமலையில் அய்யப்பன் கோவிலில் வரலாறு காணாத அளவிலான பக்தர்கள் கூட்டம்.10 மணிநேரம் காத்திருந்து சாமி தரிசனம்

ஆன்மீக தளங்கள் ஆன்மீகம் இந்தியா கோயில்கள் சிறப்பு செய்திகள்

சபரிமலை அய்யப்பன் கோவில் ஐப்பசி மாத பூஜைக்காக கடந்த 16-ந்தேதி நடை திறக்கப்பட்டு, தினமும் பூஜைகள் நடைபெற்று வருகின்றன. அய்யப்பனை தரிசிக்க பக்தர்கள் தினமும் அனுமதிக்கப்படுகிறார்கள். நாளை, திங்கட்கிழமையுடன், மாதாந்திர பூஜை நிறைவடைகிறது.இந்த மாத பூஜையில் சபரிமலையில் வரலாறு காணாத அளவுக்கு கூட்டம் அதிகரித்து வருகிறது. பொதுவாக மாத பூஜை நாட்களில், பக்தர்கள் கூட்டம் வலிய நடை பந்தல் வரை மட்டுமே இருக்கும், ஆனால் தற்போது பக்தர்கள் சரம் குத்தி வரை (2 கி.மீ தூரத்திற்கு) நீண்ட வரிசையில் தரிசனத்திற்காக காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. மாத பூஜை நேரத்தில் சபரிமலையில் பாதுகாப்பு பணிக்கு குறைவான போலீசார்கள்.மட்டுமே நியமிக்கப்படுவார்கள், இந்நிலையில் தற்போது 170 பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர் இருப்பினும் கூட்டம் அதிகமானதால் போலீசாரால் பக்தர்கள் கூட்டத்தை சமாளிக்க முடியவில்லை என்றும் இதனால் பக்தர்கள் 10 மணி நேரம் வரை காத்திருந்து சாமி தரிசனம் செய்ய வேண்டிய சூழ்நிலை உருவாகியுள்ளது என்று.கூறப்படுகிறது. 18-ம் படிக்கு கீழ் வாவரு நடை, கற்பூர ஆழி மற்றும் மகாகாணிக்கை பெட்டியை சுற்றியுள்ள பகுதியில் கூட்ட நெரிசல் அதிகமாக காணப்படுகிறது. மாத பூஜையில் வரலாறு காணாத அளவுக்கு கூட்டம் குவிந்ததை சமாளிக்க தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படாததால் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இந்நிலையில், மண்டல, மகர விளக்கு சீசனுக்காக அடுத்த மாதம் 15-ந்தேதி சபரிமலை கோவில் நடை திறக்கப்பட உள்ளது. இந்த சீசனில் தினசரி 80 ஆயிரம் பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.இந்த சீசனுக்கான ஏற்பாடுகள் இந்த ஆண்டு தொடக்கம் முதலே தினசரி 18 மணி நேர தரிசனத்திற்கு அமைக்கப்பட்டுள்ளது. ஆன்லைன் மற்றும் உடனடி தரிசன முன்பதிவு மூலம் தினசரி 70 ஆயிரம் மற்றும் 10 ஆயிரம் என மொத்தம் 80 ஆயிரம் பக்தர்கள் தரிசனம் செய்ய முடியும்.இதனால் கூட்ட நெரிசலை தவிர்க்கலாம் என திருவிதாங்கூர் தேவஸ்தானம் கூறியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *