மிஸ் யுனிவர்ஸ் அழிகிப் போட்டி வரலாற்றில் முதன்முறையாக பங்கேற்கும் சவுதி அரேபிய அழகி

அரபு நாடுகள் உலகம் கடந்த நிகழ்ச்சிகள் சுற்றுலா செய்திகள் நிகழ்வுகள் மற்றவை முதன்மை செய்தி வரும் நிகழ்ச்சிகள்

அழகிகளை தேர்வு செய்ய உலகளவில் பல்வேறு போட்டிகள் நடைபெறுகின்றன. அந்த வகையில் மிக உயரிய அழகி போட்டியாக இருக்கும் மிஸ் யுனிவர்ஸ் அழகி போட்டியில் முதன்முறையாக சவுதி அரேபியா நாட்டின் அழகி பங்கேற்கபோகிறார்.
உலகின் பல்வேறு நாடுகள் அழகிகளுக்கான போட்டிகளை நடத்துகின்றன. அதில் வெற்றிப்பெறும் பெண்ணுக்கு அந்நாட்டு அழகு பட்டம் கொடுக்கப்படுகிறது.
இந்நிலையில், இந்தாண்டுக்கான மிஸ் யுனிவர்ஸ் போட்டியில் முதன்முறையாக சவுதி அரேபியா நாட்டின் அழகி கலந்துகொள்ளப்போவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இஸ்லாமிய நாடான சவுதி அரேபியா, பெண்களுக்கு என்று தனி கட்டுபாடுகளை கொண்டுள்ளது. தங்களுக்கு என்று தனித்துவமான கலாச்சாரத்தை பின்பற்றி வருகின்றனர். அதன் அடிப்படையிலேயே அங்கு ஆட்சி முறையும் அமைந்துள்ளது.
சமீப காலமாக இளவரசர் முகமது பின் சல்மான் அல் சவுத் தலைமையிலான ஆட்சியில், பெண்களுக்கான உரிமைகளில் தளர்வு ஏற்படுத்தப்படுகிறது. பெண்களுக்கு ஓட்டுநர் உரிமை, ஆண்கள் கலந்துகொள்ளும் நிகழ்ச்சிகளில் பெண்கள் கலந்துகொள்ள அனுமதி போன்றவை அமல்படுத்தப்பட்டது.
இந்நிலையில், தற்போது மிஸ் யுனிவர்ஸ் போட்டியில் சவுதி அரேபியா சார்பாக 27 வயதான மாடல் ரூமி அல்கஹ்தானி (Rumy Alqahtani) கலந்துகொள்கிறார்.
மேலும், சமீபத்தில் மிஸ் மற்றும் மிஸ்சஸ் கோபல் ஏசியன் அழகி போட்டி (Miss and Mrs Global Asian), மிஸ் ஏசியா இண்டர்நேஷனல் அழகி போட்டி (Miss Asia international) ஆகியவற்றில் சவுதி அரேபியா சார்பில் கலந்துகொண்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *