மின்சாரப் படகுகளுக்கு ரூ.1.5 கோடி வரை மானியம்! சிங்கப்பூர் புதிய திட்டம்.

ஆராய்ச்சி உலகம் கண்டுபிடிப்பு சிங்கப்பூர் சிறப்பு சுற்றுச் சூழல் செய்திகள்

சிங்கப்பூரில் மின்சாரத்தில் இயங்கும் துறைமுகப் படகுகளின் பயன்பாட்டை அதிகரிக்க புதிய மானியத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இந்தத் திட்டம் 2027 ஜனவரி 1 முதல் அமலுக்கு வரவுள்ளது.இந்தத் திட்டத்தின் கீழ், சிறிய மின்சாரப் படகுகளை வாங்குவதற்கு 1.5 லட்சம் சிங்கப்பூர் டாலர் வரையும், பெரிய படகுகளுக்கு 2.5 லட்சம் சிங்கப்பூர் டாலர் வரையும் மானியம் வழங்கப்படும். இதன் மூலம் மின்சாரப் படகுகளை வாங்குவதற்கான செலவைக் குறைத்து, அவற்றின் பயன்பாட்டை ஊக்குவிக்க சிங்கப்பூர் திட்டமிட்டுள்ளது.தற்போது துறைமுகங்களில் பயன்படுத்தப்படும் பல படகுகள் டீசல் போன்ற எரிபொருட்களில் இயங்குகின்றன. இவற்றுக்குப் பதிலாக மின்சாரப் படகுகளைப் பயன்படுத்துவதன் மூலம் எரிபொருள் செலவைக் குறைக்கவும், காற்று மாசுபாட்டைக் கட்டுப்படுத்தவும் முடியும். மேலும், மின்சாரப் படகுகளின் உற்பத்தியையும் அதிகரித்து, சுற்றுச்சூழலுக்கு உகந்த கடல் போக்குவரத்தை மேம்படுத்துவது இந்தத் திட்டத்தின் முக்கிய நோக்கமாகும்.சர்வதேச வர்த்தகத்தில் முக்கியப் பங்கு வகிக்கும் சிங்கப்பூர், துறைமுகச் செயல்பாடுகளை மேலும் சுற்றுச்சூழலுக்கு உகந்ததாக மாற்ற பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்தப் புதிய மானியத் திட்டம், மின்சாரப் படகுகளின் பயன்பாட்டை அதிகரிப்பதுடன், எதிர்காலத்தில் பசுமையான கடல் போக்குவரத்தை உருவாக்கவும் உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *