ஆசியக்கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடர் பாகிஸ்தான் மற்றும் இலங்கயில் தொடங்கி நடைபெற்று வருகிறது. தொடரின் மூன்றாவது லீக் போட்டியில், இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் இன்று மோதின. 2019ம் ஆண்டு உலகக்கோப்பை தொடருக்குப் பிறகு, முதன்முறையாக இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் ஒருநாள் போட்டிகளில் மோத உள்ளன. இதனால் இந்த போட்டியின் மீதான எதிர்பார்ப்பு அதிகம் காணப்பட்டது.
இலங்கையில் தொடர்ந்து பெய்த கனமழை காரணமாக இந்தியா- பாகிஸ்தான் இடையிலான போட்டி கைவிடப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. பந்து வீச்சில் அசத்திய பாகிஸ்தான் அணி இந்திய அணியை 48.5 ஓவர்களில் 10 விக்கெட்டுகளையும் கைப்பற்றி 266 ரன்கள் விட்டுக்கொடுத்தது.
267 ரன்கள் இலக்கை இந்தியா நிர்ணயித்துள்ள நிலையில், பாகிஸ்தான் அணி களமிறங்க தயாராகிய நிலையில் மழை மீண்டும் குறுக்கிட்டுள்ளதால் ரசிகர்கள் ஏமாற்றமடைந்தனர். இதனால், ஓவர் குறைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
இந்தியா பாகிஸ்தான் போட்டி நடைபெற்றுவரும் பல்லேகேலே சர்வதேச மைதானம் அமைந்துள்ள பகுதியில் மழை பெய்ததால் போட்டி துவங்குவதில் தாமதம் ஏற்பட்டது. மீண்டும் மழை பெய்ததால் ஆட்டம் நிறுத்தப்பட்டதாக இறுதியில் அறிவிக்கப்பட்டது.

