சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் ஜாமீன் கோரி செந்தில் பாலாஜி தாக்கல் செய்த வழக்கின் விசாரணை முடிவுக்கு வந்துள்ளது. இதற்கான தீர்ப்பு நாளை காலை 10.30 மணிக்கு உச்ச நீதிமன்றத்தில் வழங்கப்படவுள்ளது. தமிழ்நாடு போக்குவரத்து துறையில் வேலை வழங்குவதாக கூறி பண மோசடி செய்ததாக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கடந்த ஆண்டு அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு, தற்போது ஒரு ஆண்டாக சிறையில் உள்ளார். தற்போது, அவர் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.மேலும் அவர் ஜாமீன் கோரி சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. அதன் பிறகு, சென்னை ஐகோர்டும் தொடர்ந்து அந்த மனுக்களை தள்ளுபடி செய்தது. இந்நிலையில், அவர் உச்ச நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி மனுதாக்கல் செய்துள்ளார், மற்றும் இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் அபய்.எஸ்.ஓஹா மற்றும் அகஸ்டின் ஜார்ஜ் மாயிஷ் ஆகியோரால் விசாரிக்கப்படுகிறது.இந்நிலையில், செந்தில் பாலாஜி தாக்கல் செய்த ஜாமீன் கோரிக்கையின் விசாரணை ,மற்றும் அதன் தீர்ப்பு நாளை அறிவிக்கப்பட உள்ளது. நாளை காலை 10.30 மணிக்கு உச்ச நீதிமன்றம் செந்தில் பாலாஜியின் ஜாமீன் வழக்கில் தீர்ப்பளிக்கவுள்ளது. எனவே, செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் கிடைக்குமா என்பது குறித்து நாளை தெரியவரும் என தகவல்.

