கஞ்சா புழக்கம்: SRM பல்கலைக்கழகத்தில் சோதனை

இந்தியா சிறப்பு செய்திகள் தமிழ்நாடு முதன்மை செய்தி

SRM UNIVERSITY, செங்கல்பட்டு மாவட்டத்தில் கூடுவாஞ்சேரி அருகே உள்ள பொத்தேரியில் அமைந்துள்ள ஒரு பிரபலமான தனியார் பல்கலைக்கழகம். பல்கலைக்கழக வளகத்தில் பொறியியல் கல்லூரி, மருத்துவக் கல்லூரி மற்றும் டிப்ளமோ பட்டப்படிப்புகள் உள்ளிட்ட கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன.

இன்று காலை 1000க்கும் மேற்பட்ட போலீசார் திடீரென எஸ்ஆர்எம் பல்கலைக்கழக வளாகத்திற்கு வந்துள்ளனர். மேலும், கல்லூரியைச் சுற்றியுள்ள ஆண், பெண் விடுதிகளிலும் தீவிர சோதனை நடத்தத் தொடங்கியுள்ளனர்.

மாணவர்களிடையே அதிக அளவு கஞ்சா புழக்கம் இருப்பதால், விடுதிகள் மற்றும் கல்லூரி பகுதிகளில் தீவிர சோதனை நடத்தப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இக்கல்லூரியில் ஆந்திரா, கர்நாடகா, கேரளா என பல அண்டை மாநிலங்களை சேர்ந்த மாணவர்கள் படித்து வருகின்றனர்.

நைஜீரியா, மலேசியா, இந்தோனேசியா, இலங்கை போன்ற பல்வேறு நாடுகளைச் சேர்ந்த மாணவர்களும் இங்கு படித்து வருகின்றனர்.

தற்போதைய சூழ்நிலையில், எதிர்பாராதவிதமாக 1000க்கும் மேற்பட்ட போலீசார் அதிகாலையில் கல்லூரி வளாகத்தில் குவிந்தனர்.கல்லூரி வளாகத்திற்கு போலீசார் வந்ததை அடுத்து, அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

தனியார் கல்லூரி மற்றும் கல்லூரிக்கு அருகில் உள்ள பல இடங்களில் சோதனை நடந்து வருகிறது.

கல்லூரியின் சுற்றுவட்டார வீடுகளிலும் சோதனை நடத்தப்பட்டது. அடுக்குமாடி குடியிருப்பில் வசிப்பவர்கள், இருசக்கர வாகனத்தில் செல்பவர்கள் என்ன எடுத்துச் சென்றனர் என்பது குறித்தும் சோதனை நடத்தப்பட்டு வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *