ஒலிம்பிக்ஸ் போட்டிகளில் கிரிக்கெட், ஸ்குவாஷ் போன்ற விளையாட்டுகள் அறிமுகம்; 2018 ஒலிம்பிக்ஸ் போட்டிகளில் சேர்த்துக் கொள்ளப்படும் என அறிவிப்பு

இந்தியா உலகம் கடந்த நிகழ்ச்சிகள் செய்திகள் நிகழ்வுகள் மற்றவை முதன்மை செய்தி வட அமெரிக்கா வரும் நிகழ்ச்சிகள் விளையாட்டு

எதிர்வரும் 2028 லாஸ் ஏஞ்சலஸ்
ஒலிம்பிக்கில் கிரிக்கெட் உள்ளிட்ட ஐந்து விளையாட்டுகள் புதிதாக சேர்க்க சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி நிர்வாகக் குழு ஒப்புதல் அளித்துள்ளது.
பேஸ்பால் மற்றும் சாஃப்ட்பால், லாக்ரோஸ், ஸ்குவாஷ், ஃப்ளாக் புட்பால் மற்றும் கிரிக்கெட் என ஐந்து விளையாட்டுகள் சேர்க்க சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி நிர்வாகக் குழு ஒப்புதல் அளித்துள்ளது. ஒலிம்பிக் போட்டிகளை நடத்தும் ஒவ்வொரு ஹோஸ்ட் நகரமும் (host city) தங்கள் நாடுகளில் நடத்தும் ஒலிம்பிக்கில் புதிய விளையாட்டுகளைச் சேர்க்க கோரிக்கை வைக்கலாம். சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி விதி இதற்கு வழிவகை செய்கிறது.
அதன்படி, 2028 ஒலிம்பிக் போட்டிகளை நடத்தும் லாஸ் ஏஞ்சல்ஸ், பேஸ்பால் மற்றும் சாஃப்ட்பால், லாக்ரோஸ், ஸ்குவாஷ், ஃப்ளாக் புட்பால் மற்றும் கிரிக்கெட் என ஐந்து விளையாட்டுகளை ஒலிம்பிக் போட்டிகளில் சேர்க்க இந்த வார தொடக்கத்தில் சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியிடம் கோரிக்கையாக வைத்தது. இன்று மும்பையில் நடந்த ஒலிம்பிக் கமிட்டியின் நிர்வாக குழு கூட்டத்தில் இந்தக் கோரிக்கைகள் ஆலோசிக்கப்பட்டது. முடிவில் ஒலிம்பிக்கில் மேற்கூறிய ஐந்து விளையாட்டுகளை சேர்க்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *