செப்டம்பர் 4இல் பிரதமர் மோடி சிங்கப்பூர் செல்லவிருப்பதாக மத்திய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளாது.
சுல்தான் ஹாஜி ஹசானல் போல்கியாவின் அழைப்பின் பேரில், பிரதமர் மோடி செப்டம்பர் 3, 4 ஆகிய தேதிகளில் புருனே தாருஸ்ஸலாமிற்கு பயணம் செய்யவுள்ளார். இந்தியாவிற்கும் புருனேவிற்கும் இடையிலான தூதரக உறவுகள் நிறுவப்பட்ட 40 ஆவது ஆண்டு நிறைவுடன் இந்த பயணம் ஒத்துப்போகிறது. இதனைத் தொடர்ந்து, சிங்கப்பூர் பிரதமர் லாரன்ஸ் வோங்கின் அழைப்பின் பேரில், புருனேயில் இருந்து பிரதமர் மோடி செப்டம்பர் 4, 5 ஆகிய தேதிகளில் சிங்கப்பூருக்கும் பயணம் மேற்கொள்கிறார். இந்த பயணத்தின்போது, பல்வேறு திட்டங்கள் மேற்கொள்ளப்பட உள்ளன’’ என்று தெரிவித்தார்.

