சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் ஜெயிலர் திரைப்படத்தின் மூன்றாவது பாடல் நாளை வெளியாகிறது – சன் பிக்சர்ஸ் தகவல்

இசை இந்தியா சிறப்பு சினிமா செய்திகள் தமிழ்நாடு நிகழ்வுகள் மற்றவை முதன்மை செய்தி வரும் நிகழ்ச்சிகள்

இந்திய திரையுலகின் முன்னணி நடிகரான ரஜினிகாந்த் தற்போது நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ‘ஜெயிலர்’ படத்தில் நடித்து வருகிறார். இதில் மலையாள நடிகர் மோகன்லால், கன்னட நடிகர் சிவராஜ்குமார், தமன்னா, ரம்யா கிருஷ்ணன், யோகிபாபு, வசந்த் ரவி, மற்றும் விநாயகன் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.
இந்த படத்தில் ரஜினிகாந்த், முத்துவேல் பாண்டியன் என்ற கதாபாத்திரத்தில் ஜெயிலராக நடிக்கிறார். ஆக்‌ஷன் படமாக தயாராகி வரும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். ‘ஜெயிலர்’ படத்தின் முதல் பாடலான ‘காவாலா’ பாடல் சமீபத்தில் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலானது. இதையடுத்து இந்த படத்தின் இரண்டாவது பாடலான ”ஹுக்கும் எனப்பெயரிடப்பட்ட பாடல் வெளியானது.
இந்நிலையில் ஜெயிலர் திரைப்படத்தின் மூன்றாம் பாடல் குறித்த தகவலை படக்குழு அறிவித்துள்ளது. இது தொடர்பாக ஜெயிலர் திரைப்படத்தை தயாரிக்கும் சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் தகவல் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி ‘ஜெயிலர்’ திரைப்படத்தின் 3வது சிங்கிள் பாடலான “ஜூஜூபி” நாளை மாலை 6 மணிக்கு வெளியாகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *