அதிமுக பொதுக்குழு தொடர்பான ஓபிஎஸ் தொடர்ந்த வழக்கில் உச்சநீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு – எடப்பாடி பழனிச்சாமி இடைக்கால பொதுச் செயலாளராக தேர்ந்தெடுத்தது செல்லும்

அரசியல் இந்தியா கடந்த நிகழ்ச்சிகள் செய்திகள் தமிழ்நாடு நிகழ்வுகள்

அதிமுகவில் எழுந்த ஒற்றைத் தலைமை சர்ச்சையால் ஓபிஎஸ், பழனிச்சாமி இரு தரப்பினருக்கும் இடையிலான மோதலால் சென்னை உயர்நீதிமன்ற உத்தரவின்படி கடந்த ஆண்டு எடப்பாடி பழனிச்சாமி தரப்பு பொதுக்குழுவை கூட்டியது. அப்போது பழனிச்சாமி இடைக்கால பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டார். ஓபிஎஸ் உள்பட பலர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டனர். இந்த பொதுக்குழுவை எதிர்த்து ஓபிஎஸ் தரப்பு உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தது. இதில், அதிமுக பொதுக்குழு செல்லும் என சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பை வழங்கியிருந்தது. இந்த தீர்ப்பை எதிர்த்து ஓபிஎஸ் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு வழக்கு தொடரப்பட்டது. உச்சநீதிமன்றம் அதிமுக பொதுக்குழு வழக்கில், இன்று பரபரப்பு தீர்ப்பு வழங்கி உள்ளது. ஜூலை 11ஆம் தேதி நடந்த அதிமுக பொதுக்குழு கூட்டம் செல்லும் என்றும், இடைக்கால பொதுச்செயலாளராக பழனிச்சாமி தேர்ந்தெடுக்கப்பட்டதும் செல்லும் எனவும் கூறியுள்ளது. ஓபிஎஸ் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *