68வது தேசிய திரைப்பட விருதுகளை மத்திய அரசின் திரைப்பட விழாக்கள் இயக்குநரகம் அறிவித்துள்ளது.
அதில் 2020 ஆம் ஆண்டு ஜனவரி 1 ஆம் தேதி முதல் டிசம்பர் 31 ஆம் தேதி வரை திரைப்பட வாரியத்தால் அங்கீகரிக்கப்பட்ட திரைப்படங்கள் விருதுக்கு தகுதிப் பெற்றுள்ளது. இந்தியாவில் திரைப்படம் எடுக்க உகந்த நகரமாக மத்தியப்பிரதேசம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
தமிழ்:
சிறந்த படம் – சூரரைப்போற்று
சிறந்த நடிகர் – நடிகர் சூர்யா (சூரரைப்போற்று ) ( அஜய் தேவ்கனுடன் பகிர்ந்து கொள்கிறார்)
சிறந்த பின்னணி இசை – ஜிவி பிரகாஷ் குமார்
சிறந்த நடிகை – அபர்ணா பாலமுரளி (சூரரைப்போற்று )
சிறந்த திரைக்கதை – சுதா கொங்கரா மற்றும் ஷாலினி உஷா நாயர் (சூரரைப்போற்று)
சிறந்த வசனம் – இயக்குநர் மடோனா அஸ்வின் ( மண்டேலா)
சிறந்த அறிமுக இயக்குநர் – இயக்குநர் மடோனா அஸ்வின் ( மண்டேலா)
சிறந்த படத்தொகுப்பு – ஸ்ரீகர் பிரசாத் ( சிவ ரஞ்சனியும் சில பெண்களும்)
சிறந்த தமிழ் படம் – சிவ ரஞ்சனியும் சில பெண்களும்
சிறந்த துணை நடிகை – லக்ஷ்மி பிரியா சந்திரமௌலி
2020ம் ஆண்டுக்கான தாதா சாஹேப் பால்கே விருது பிரபல திரைப்பட நடிகை திருமதி ஆஷா பரேக் பெறுவதாக மத்திய தகவல் ஒலிபரப்பு அமைச்சகம் அறிவித்துள்ளது.