டி20 உலக் கோப்பை சூப்பர் 8 சுற்று; ஆஸ்திரேலியா, இங்கிலாந்து அணிகள் தகுதிப் பெற்றன

ஆஸ்திரேலியா இங்கிலாந்து உலகம் கடந்த நிகழ்ச்சிகள் செய்திகள் நிகழ்வுகள் மற்றவை முதன்மை செய்தி வட அமெரிக்கா விளையாட்டு

டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில், ஸ்காட்லாந்தை ஆஸ்திரேலியா அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இதன் மூலம் ஆஸ்திரேலியாவும், நெட் ரன்ரேட் அடிப்படையில் இங்கிலாந்தும் சூப்பர்-8 பிரிவுக்கு முன்னேறின.
மேற்கு இந்திய தீவுகள் மற்றும் அமெரிக்காவில் நடைபெற்று வரும் டி20 உலகக் கோப்பை தொடரில் குரூப் பி பிரிவில் இடம்பெற்றுள்ள ஆஸ்திரேலியா மற்றும் ஸ்காட்லாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்தின.
முதலில் விளையாடிய அந்த அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 180 ரன்கள் சேர்த்தது. அதிக அனுபவம் இல்லாத ஸ்காட்லாந்து அணி வலிமையான ஆஸ்திரேலியாவின் பந்து வீச்சை சமாளித்து 180 ரன்கள் குவித்ததை கிரிக்கெட் வல்லுனர்கள் பாராட்டியிருந்தனர்.
இதன் மூலம் ஆஸ்திரேலியா அணி 8 புள்ளிகளுடன் குரூப்-பி பிரிவில் முதலிடம் பிடித்தது. இந்த போட்டி தொடங்குவதற்கு முன்பாக இதில் ஆஸ்திரேலிய அணி தோல்வியடைந்தால் ஸ்காட்லாந்து சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறும் என்கிற நிலைமை காணப்பட்டது.
ஆஸ்திரேலியாவுடன் ஸ்காட்லாந்து தோல்வியடைந்ததால், இங்கிலாந்து, ஸ்காட்லாந்து அணிகள் தலா 5 புள்ளிகள் பெற்ற நிலையில், நெட் ரன்ரேட் அடிப்படையில் இங்கிலாந்து சூப்பர்-8 பிரிவுக்கு முன்னேறியது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *