தமிழக அரசு கடந்த சில மாதங்களாக பல்வேறு வரிகளை உயர்த்தியும், பல பொருட்களின் விலைகளையும் உயர்த்தி வருகின்றன. இது நடுத்தர குடும்பங்கள், ஏழை குடும்பங்களை நிச்சயம் பாதிக்கும் என்றாலும் தமிழகத்தின் பொருளாதார சூழ்நிலை, மத்திய அரசின் அழுத்தம் இதன் காரணமாக விலைவாசிகளை, வரி உயர்த்தியதாக தமிழக அரசு கூறிவருகிறது. இதனை மக்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. கொரோனா லாக்டவுன் காலத்தில் வருமானம் ஏதுமின்றி பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் இத்தருணத்தில் இது மேலும் சுமையை கூட்டுகிறது.
கடந்த சில மாதங்கள் முன்பு சொத்து வரியை உயர்த்தி தமிழக அரசு அறிக்கை வெளியிட்டது. இது 150% வரை வரி அதிகரிக்கப்பட்டது. அதன்பின் பால் சார்ந்த பொருட்களுக்கு தமிழக அரசு விலையை உயர்த்தியது. இது ஜிஎஸ்டி அதிகரிப்பின் விழைவு என தமிழக அரசு தெரிவித்தது. பின்னர் மின்சாரக் கட்டணத்தை உயர்த்திய மாநில அரசு இது மத்திய அரசின் அழுத்தமென தெரிவித்தது. அதன்பின் வாகனப் பதிவு, வாகன போக்குவரத்து சேவைகளுக்கு இப்போதுள்ள கட்டணத்தை விட 10 மடங்கு அதிகம்.
தற்போது சென்னை மாநகராட்சி சொத்து வரியோடு, வீட்டு குடிநீர் வரியையும் ஏற்றியுள்ளது. அந்த கு
குடிநீர் வரியை கட்ட செப்டம்பர் 30ம் தேதி காலக்கெடு நிர்ணயத்துள்ளது தமிழக அரசு. இப்படி பல்வேறு வரிகளை ஏற்றியதால் மக்கள் பொருளாதாரச் சிக்கல்களுக்கு உள்ளாகின்றனர்.