தென்னாப்பிரிக்கா கேப்டவுனில் நடைபெற்ற இரண்டாவது டெஸ்டில் இந்திய அணி வெற்றி; டெஸ்ட் தொடரை சமன் செய்தது

ஆப்ரிக்க நாடுகள் இந்தியா உலகம் கடந்த நிகழ்ச்சிகள் செய்திகள் நிகழ்வுகள் மற்றவை முதன்மை செய்தி விளையாட்டு

கேப்டவுனில் நடைபெற்ற இரண்டாவது மற்றும் இறுதி டெஸ்டில் இந்திய அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
தென்னாப்பிரிக்காவுக்கு சுற்றுபயணம் செய்த இந்திய அணி, டி20, ஒருநாள் கிரிக்கெட், டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடியது. 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில், 1க்கு 1 என்ற கணக்கில் இந்திய சமன் செய்த்தது. 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இந்திய அணி 2-க்கு 1 என்ற கணக்கில் தொடரை இந்திய அணி கைப்பற்றியது. 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில், Centurion-ல் நடைபெற்ற முதலாவது போட்டியில் தென்னாப்பிரிக்கா அணி இன்னிங்ஸ் வெற்றி பெற்றது.
டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா அணி முதலில் பேட் செய்தது. முதல் இன்னிங்சில் தொடக்கம் முதலே விக்கெட்டுகளை இழக்கத்தொடங்கிய அந்த அணி, 55 ரன்னுக்கு ஆட்டமிழந்தது. அதிகபட்சமாக Kyle Verreynne 15 ரன் எடுத்தார்.
இந்திய அணியில் முகமது சிராஜ் அபாரமாக பந்துவீசி 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார். பும்ரா 2 விக்கெட்டுகளையும், முகேஷ் குமார் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
இதைத்தொடர்ந்து , இரண்டாவது இன்னிங்சை ஆடிய தென்னாப்பிரிக்கா அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 176 ரன் எடுத்தது. அந்த அணியில் அதிகபட்சமாக எய்டன் மார்க்ரம் 106 ரன் அடுத்தார். இந்திய அணியில் பும்ரா அபாரமாக பந்துவீசி 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார். முகேஷ் குமார் 2 விக்கெட்டுகளையும், முகேஷ் குமார், பிரசித் கிருஷ்ணா தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினார்.
இந்திய அணி தனது இரண்டாவது இன்னிங்சை வெறும் 79 ரன் எடுத்தால் வெற்றி என்ற வலுவான நிலையில் தொடங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களான ஜெய்ஸ்வால் மற்றும் ரோகித் சர்மா அடித்து ஆடினர். ஜெய்ஸ்வால் 23 பந்துகளில் 28 ரன் எடுத்து ஆட்டமிழந்தார். சுப்மன் கில் 10 ரன்னிலும், விராட் கோலி 12 ரன்னிலும் வெளியேறினர். இறுதியில் இந்திய அணி 3 விக்கெட்டுகளை இழந்து 79 என்ற இலக்கை எட்டியது.
இதனைத்தொடர்ந்து முதல் இன்னிங்சை ஆடிய இந்தியா அனைத்து விக்கெட்டுகளை இழந்து 153 ரன் எடுத்தது. இந்திய அணியில் அதிகபட்சமாக விராட் கோலி 46 ரன்னும், ரோகித் சர்மா 39 ரன்னும், சுப்மன் கில் 36 ரன்னும் சேர்த்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *