தவெக கட்சியின் ரசிகர்கள், இனி மெய்நிகர் வீரர்கள்” அக்கட்சியின் தலைவர் நடிகர் விஜய் கூறியுள்ளார்

அரசியல் இசை இந்தியா கடந்த நிகழ்ச்சிகள் சினிமா செய்திகள் தமிழ்நாடு நிகழ்வுகள் மற்றவை முதன்மை செய்தி

தவெக கட்சியின் ரசிகர்கள், இனி மெய்நிகர் வீரர்கள்” என்று நடிகர் அக்கட்சியின் தலைவர் விஜய் கூறியுள்ளார்.
தமிழக வெற்றிக்கழகத்தின் தகவல் தொழில்நுட்பப் பிரிவு மற்றும் சமூக ஊடக பிரிவு ஆலோசனை கூட்டம் சோழிங்கநல்லூரில் நடைபெற்றது. அக்கட்சியின் பொதுச்செயலாளர் ஆனந்த் தலைமையில் நடந்த கூட்டத்தில், தேர்தல் பரைப்புரை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜூனா உள்ளிட்டோர் பங்கேற்றனர். இந்த கூட்டத்தில் பங்கேற்க வந்த நிர்வாகிகளின் செல்போன்களை வாங்கி வைக்கப்பட்டன. ஆலோசனைக்கூட்டத்தில் நடந்த விவரங்கள் குறித்து ரகசியம் காக்க செல்போன் அனுமதி மறுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், கூட்டத்தில் தவெக கட்சியின் தலைவர் விஜய் பேசிய வீடியோ ஒளிபரப்பப்பட்டது. அதில் பேசிய விஜய், “இந்தியாவிலேயே தங்கள் கட்சியின் சமூக ஊடகப் பிரிவுதான் பெரியது. தமிழக வெற்றிக்கழகத்தின் தொண்டர்கள் கண்ணியத்துடன் இருக்க வேண்டும். இனி தவெக கட்சியின் ரசிகர்கள், மெய்நிகர் வீரர்கள் (VIRTUAL WARRIORS)” என்று தெரிவித்தார்.
மேலும் பொதுச்செயலாளர் ஆனந்த் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் தேர்தல் பரப்புரை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா, தகவல் தொழில்நுட்பம் மற்றும் சமூக ஊடக பிரிவுச் சேர்ந்த சி.டி.ஆர். நிர்மல் குமார், ஐடி ஒருங்கிணைப்பாளர் ஜெயபிரகாஷ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்றவர்கள், செல்போன்களை எடுத்துச் செல்ல தடைவிதிக்கப்பட்டது. தவெகவில், தகவல் தொழில்நுட்ப அணி என அதிகாரப்பூர்வமாக இல்லாத நிலையில், மாவட்ட செயலாளர்களிடம் நியமிக்கப்பட்ட தகவல் தொழில்நுட்ப அணி நிர்வாகிகள் கையொப்பமிட்டு படிவம் ஒன்றும் பெறப்பட்டது. அந்த படிவத்தில் உள்ளவர்கள் மட்டுமே ஆலோசனை கூட்டத்துக்கு அனுமதிக்கப்பட்டனர். மேலும் ஆலோசனைக்கூட்டத்தில் நடந்த விவரங்கள் குறித்து ரகசியம் காக்க செல்போன் அனுமதி மறுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *