6 ஆண்டுகளாக போட்டியிடாத 42 கட்சிகளின் பதிவுகளை ரத்து செய்தது தேர்தல் ஆணையம் .

அரசியல் இந்தியா சிறப்பு செய்திகள் தமிழ்நாடு

6 ஆண்டுகளாக தேர்தலில் போட்டியிடாத 42 கட்சிகளின் பதிவை தேர்தல் ஆணையம் ரத்து செய்துள்ளது. தமிழ்நாட்டில் முதற்கட்டமாக கடந்த மாதம் 22 கட்சிகளின் பதிவு ரத்து செய்யப்பட்ட நிலையில் தற்போது 42 கட்சிகளின் பதிவை தேர்தல் ஆணையம் ரத்து செய்துள்ளது. நாட்டில் உள்ள அரசியல் கட்சிகள் (தேசிய/மாநில/பதிவுசெய்யப்பட்ட அங்கீகரிக்கப்படாத அரசியல் கட்சிகள்(RUPP) மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் 1951ன் பிரிவு 29A இன் விதிகளின் கீழ் இந்திய தேர்தல் ஆணையத்தில் (ECI) பதிவு செய்யப்பட்டுள்ளன.எந்தெந்த மாநிலங்களில் எத்தனை கட்சிகளின் அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டுள்ளது என்பதற்கான எண்ணிக்கையை வெளியிட்டுள்ளது. அதில் அதிகபட்சமாக உத்தரப்பிரதேசத்தில் 121 பதிவு செய்யப்பட்ட அங்கீகரிக்கப்படாத அரசியல் கட்சிகளின் பதிவு ரத்து செய்யப்பட்டுள்ளது. கடந்த 2 மாதங்களில் நாடு முழுவதும் இதுவரை 808 கட்சிகளின் பதிவு ரத்து செய்யப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *