தக் லைஃப் படத்தின் ஓடிடி வெளியீடு; தேதியை குறித்த நடிகர் கமல்ஹாசன் முக்கிய அறிவிப்பு

இசை இந்தியா உலகம் சினிமா சின்னத்திரை செய்திகள் தமிழ்நாடு நிகழ்வுகள் பொழுதுபோக்கு மற்றவை முதன்மை செய்தி வரும் நிகழ்ச்சிகள்

தக் லைஃப் படத்தின் ஓடிடி வெளியீடு குறித்து நடிகர் கமல்ஹாசன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
கமல்ஹாசன், சிலம்பரசன், திரிஷா இணைந்து நடித்துள்ள படம் ‘தக் லைஃப்’. இந்த படத்தினை மணிரத்னம் இயக்கியுள்ளார். ஏ.ஆர். ரகுமான் இசையமைத்துள்ளார். படம் வரும் 5 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. இந்த சூழலில் ஏற்கனவே ‘ஜிங்கிச்சான்’ என்ற பாடலை படக்குழு வெளியிட்டது. இந்த பாடலுக்கு ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பு இருந்தது. இந்நிலையில், ‘தக் லைஃப்’ படத்தின் இரண்டாவது பாடலான ‘சுகர் பேபி’ பாடலின் லிரிக்கல் வீடியோ வெளியாகியுள்ளது. அலெக்சான்ட்ரா ஜாய், சுபா, சரத் சந்தோஷ் ஆகியோர் ‘சுகர் பேபி’ பாடலை பாடியுள்ளனர்.
இந்நிலையில், ‘தக் லைஃப்’ திரையரங்குகளில் வெளியான 8 வாரங்களுக்கு பிறகே ஓடிடியில் வெளியாகும் என்றும் சினிமா துறை ஆரோக்கியமாக இருக்க சக படக்குழுவும் இதை பின்பற்ற நடிகர் கமல் கோரிக்கை விடுத்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *