அயலக தமிழர் நலவாரியத்தை தொடங்கி, அயலகத் தமிழர் நலவாரியத்தில் உறுப்பினராக பதிவு செய்யும் நபர்களுக்கு மருத்துவ காப்பீடு உள்ளிட்ட பல நலத்திட்டங்கள் வழங்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. 18 முதல் 55 வயது வரையிலான அயலக தமிழர்கள், வாரியத்தில் உறுப்பினராக இணைந்து அடையாள அட்டை பெறுவதற்கான வாய்ப்பை பெற்றுள்ளனர்.அயலகத் தமிழர் நலத்துறையின் இணையதளத்தில் பதிவு செய்ய, 200 ரூபாய் கட்டணம் செலுத்தி வாரியத்தில் உறுப்பினராக இணைந்து அடையாள அட்டையை பெறலாம். இந்த அடையாள அட்டை மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை புதுப்பிக்கப்பட வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்நிலையில், தமிழக அரசு அயலக தமிழர்களுக்காக விபத்து காப்பீட்டு திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது, இதில் 5 லட்சம் ரூபாய் மருத்துவ காப்பீட்டிற்கு ரூ. 395 + GST எனும் சந்தா செலுத்த வேண்டும்.மேலும், இந்த திட்டத்துடன் சேர்ந்து, தீவிர சிகிச்சை தேவைப்படும் நோய்களுக்கு காப்பீடு விருப்பத்தின் அடிப்படையில் INR 350 + கட்டணங்கள் என வழங்கப்படுகிறது. அயலகத் தமிழர் அட்டை வைத்திருப்பவர்களுக்கு விரிவான அடையாள காப்பீடு, குறைந்தபட்சம் INR 5,00,000/- அளவிலான விபத்துக் காப்பீடு மற்றும் விருப்பத்தின் அடிப்படையில் குறைந்தபட்சம் INR 1,00,000/- அளவிலான தீவிர சிகிச்சை காப்பீடு வழங்கப்படுகிறது. புற்றுநோய், சிறுநீரக செயலிழப்பு, பக்கவாதம் போன்ற பல தீவிர நோய்களுக்கு காப்பீடு வழங்கப்படுகிறது.அயலகத் தமிழர்களுக்கான காப்பீட்டு திட்டம் என்பது வெளிநாடுகளிலும் இந்தியாவிலும் வாழும் அயலகத் தமிழர்களுக்கு காப்பீட்டுத் தொகையை வழங்கும் ஒரு திட்டமாகும். விண்ணப்பதாரர்கள், பதிவுசெய்யப்பட்ட அயலகத் தமிழர் அடையாள அட்டை வைத்திருப்பவர்கள் மட்டுமே, இந்த காப்பீட்டை பெற முடியும். அடையாள அட்டைக்கு குறைந்தபட்சம் 1,00,000/- ரூபாய் தீவிர நோய்க்கான காப்பீடு வழங்கப்படுகிறது. மேலும், கட்டாயமற்ற தனிநபர் விபத்து காப்பீட்டுக்கு 10,00,000/- ரூபாய் வழங்கப்படுகிறது. இதில் புற்றுநோய், சிறுநீரக செயலிழப்பு, பக்கவாதம் போன்ற பல தீவிர நோய்கள் அடங்கியுள்ளன. தீவிர நோய்க்கான காப்பீட்டுத் தொகைக்கான குறைந்த வருடாந்திர கட்டணமாக ரூ.350 (18% சரக்கு மற்றும் சேவை வரியைத் தவிர்த்து) நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கட்டாயமற்ற தனிநபர் விபத்துக் காப்பீட்டுத் திட்டத்திற்காக ரூ.395 (18% சரக்கு மற்றும் சேவை வரியைத் தவிர்த்து) செலுத்த வேண்டும்.