TNPSC ஒருங்கிணைந்த பொறியியல் தேர்வு முடிவுகள் வெளியீடு: 644 விண்ணப்பதாரர்கள் நேர்காணலுக்கு தகுதி பெற்றுள்ளனர்.

செய்திகள் தமிழ்நாடு வேலைவாய்ப்புச் செய்திகள்

TNPSC ஒருங்கிணைந்த பொறியியல் தேர்வு முடிவு வெளியீடு: 644 விண்ணப்பதாரர்கள் நேர்காணலுக்கு தகுதி பெற்றுள்ளனர்.

TNPSC நடத்திய ஒருங்கிணைந்த பொறியியல் பணிகளுக்கான தேர்வு முடிவுகள் வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்டன. இதன் அடிப்படையில் 644 பேர் நேர்காணலுக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து டிஎன்பிஎஸ்சி தேர்வுக் கட்டுப்பாட்டாளர் ஏ.ஜான் லூயிஸ் இன்று வெளியிட்ட செய்திக் குறிப்பு: ஒருங்கிணைந்த பொறியியல் துறையில் காலியாக உள்ள 358 பணியிடங்களை நிரப்புவதற்கான எழுத்துத் தேர்வு ஜனவரி 6 மற்றும் 7ஆம் தேதிகளில் நடைபெற்றது.

இந்த தேர்வு முடிவுகள் தேர்வு வாரியத்தின் இணையதளத்தில் (www.tnpsc.gov.in) வெளியிடப்பட்டுள்ளது.

அடுத்த கட்ட நேர்காணலுக்கு 644 நபர்கள் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தேர்வாணவர்களின் பதிவு எண்களின் பட்டியல் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *