2023ஆம் ஆண்டிற்கான எம்பிபிஎஸ், பிடிஎஸ் மருத்துவ படிப்புகளுக்கான கலந்தாய்வு ஜுலை 22ல் தொடங்கும் என அறிவிப்பு

ஆரோக்கியம் இந்தியா செய்திகள் தமிழ்நாடு நிகழ்வுகள் மருத்துவம் மற்றவை முதன்மை செய்தி வரும் நிகழ்ச்சிகள்

எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ். படிப்பில் சேர்வதற்கான கலந்தாய்வு ஜூலை 22 முதல் தொடங்கும் என அறிவிக்கபட்டுள்ளது. தமிழ்நாடு உள்பட அனைத்து மாநில மருத்துவக் கல்லூரிகளுக்கும் 15% இடங்கள் வழங்கப்படும் என தெரிவிக்கபட்டுள்ளது. மாணவர்கள் ஆன்லைன் மூலமாகவும், சேர்க்கை மையங்கள் வாயிலாகவும் கலந்தாய்வில் பங்கேற்கலாம் என தெரிவிக்கபட்டுள்ளது. எம்.பி.பி.எஸ். ஒதுக்கீட்டு இடங்களுகான முதல்கட்ட கலந்தாய்வு ஜூலை 27, 28-ம் தேதி ஆன்லைனில் நடைபெறுகிறது.ஜூலை 22 முதல் எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ். உள்பட இளநிலை மருத்துவபடிப்புகளான அகில இந்திய கலந்தாய்வு ஜூலை 20-ம் தேதி தொடங்குவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. தமிழ்நாட்டில் உள்ள எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ். படிப்பில் சேறுவதற்கு 40,000-க்கும் மேற்பட்ட மாணவர்கள் விண்ணபித்துள்ளனர். கடந்த ஆண்டு 36,000-க்கும் அதிகமாக மாணவர்கள் விண்ணபித்திருந்தனர். மருத்துவபடிப்பிற்கு விண்ணபித்த மாணவர்களுகான தரவரிசை பட்டியல் என்பது ஜூலை 16-ம் தேதி வெளியிடபடவுள்ளது. அதனை தொடர்ந்து அகில இந்திய ஒதுக்கீட்டிற்கான கலந்தாய்வு ஜூலை 20-ம் முதல் ஆகஸ்ட் 6-ம் தேதி வரை மருத்துவ மாணவர் சேர்க்கைகான முதற்கட்ட கலந்தாய்வு நடைபெறவுள்ளது.இந்த நிலையில் தேசிய மணவர் சேர்க்கை குழுவின் வழிகாட்டுதலின்படி, ஜூலை 22-ம் தேதி முதல் மருத்துவ படிப்பில் மாணவர் சேருவதற்காகன கலந்தாய்வு மருத்துவ கல்வி மாணவர் சேர்க்கை குகழுவின் மூலமும், நடத்தபடவுள்ளதாக தெரிவிக்கபட்டுள்ளது.நடப்பண்டில் மாணவர் சேர்க்கை நடத்துவதற்குகான கால அவகாசம் குறைவாக இருக்க கூடிய காரணத்தால் அகில இந்திய கலந்தாய்வு நடைபெற கூடிய நாட்களிலேயே மாநில இடஒதுக்கிட்டிற்கான கலந்தாய்வும் நடைபெறவுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *