சமையல் எரிவாயு சிலிண்டர் விலை 200 ரூபாய் குறைக்கப்படுகிறது; மோடியின் ரக்ஷாபந்தன் பரிசாக இந்த விலைகுறைப்பு என மத்திய அரசு தகவல்

அரசியல் இந்தியா கடந்த நிகழ்ச்சிகள் சமையல் செய்திகள் தமிழ்நாடு நிகழ்வுகள் பொருளாதாரம் மற்றவை முதன்மை செய்தி

நாடு முழுவதும் வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.200 குறைக்கப்படுவதாக ஒன்றிய அரசு அறிவித்துள்ளது. சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை குறைக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் பல மாதங்களாக வலியுறுத்தி வருகின்றனர். சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை சரிவை சந்தித்த போதும் சமையல் எரிவாயு விலை குறைக்கப்படமால் இருந்து வந்தது. இந்நிலையில் நாடு முழுவதும் வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிடர் விலை ரூ.200 குறைக்கப்படுவதாக ஒன்றிய அரசு அறிவித்துள்ளது. டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான ஒன்றிய அமைச்சரவை கூட்டத்தில் விலை குறைப்புக்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் உஜ்வாலா திட்டத்தில் கீழ் 10 கோடி எரிவாயு இணைப்பு உள்ளது. உஜ்வாலா திட்டத்தின் கீழ் சமையல் எரிவாயு சிலிண்டர் பெறுவோருக்கு கூடுதலாக ரூ.200 மானியம் வழங்கப்படும். உஜ்வாலா திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டில் 32 லட்சம் பேர் சமையல் எரிவாயு இணைப்புகளை பெற்றுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *