ஜப்பானின் ஒசாகா நகரில், அரிடா ரயில் நிலையத்தை புதுப்பிக்கும் பணிகள் நடந்தன.இந்த முயற்சியின் ஒரு பகுதியாக, பழைய மரத்தால் கட்டப்பட்ட கட்டிடத்தை அகற்றி, அதிநவீன முப்பரிமாண அச்சிடும் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, வெறும் 6 மணி நேரத்தில் புதிய ரயில் நிலையம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த தனித்துவமான கட்டுமானம் உலகளவில் பெரும் கவனத்தை ஜப்பான் பக்கம் ஈர்த்துள்ளது. இந்த புதிய, முப்பரிமாண அச்சிடும் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்ட உலகின் முதல் ரயில் நிலையம் என்ற பெருமையை பெற்றுள்ளது . மேலும், இந்த முப்பரிமாண கட்டிடம் நிலநடுக்கங்களை எதிர்கொள்ளும் திறனை கொண்டதாகவும் கட்டப்பட்டுள்ளது. மேற்கு ஜப்பான் ரயில்வே நிறுவனத்தின் தகவலின்படி, இந்த நவீன ரயில் நிலையம் ஜூலை மாதத்தில் பொதுமக்களுக்கு திறக்கப்படும் என்றும் இந்த அதிநவீன தொழில்நுட்பம் கட்டுமானத் துறையில் புதிய மைல்கல் என பலரும் கூறிவருகின்றனர்..

