திருமணத்தின் போது, பிரிட்டன் இளவரசி டயானா அணிந்திருந்த கவுன், ரூ. 4.9 கோடிக்கு ஏலம் போனதாக தகவல் வெளியாகியுள்ளது.
பிரிட்டன் இளவரசர் சார்லஸ், -டயானா திருமண நிகழ்ச்சியின் போது டயானா அணிந்து வந்த கவுன் பார்வையாளர்களை கவர்ந்ததுடன், உலகத்தையே பிரமிக்க வைத்தது. ஆயிரக்கணக்கான முத்துகள், பட்டு இழைகள் சேர்த்து உருவாக்கப்பட்ட இந்த கவுன் குறித்து பல ஆண்டுகள் பேசப்பட்டன.
பிரிட்டனின் புகழ்பெற்ற ஆடை வடிவமைப்பாள் விக்டர் எடில்ஸ்டீன் வடிவமைத்துள்ளார். இந்த கவுன், அமெரிக்காவின் நியூயார்க் நகரில் இயங்கி வரும் சோத்பே ஏல நிறுவனத்திடம் உள்ளது. இந்த கவுன் சமீபத்தில் ஏலத்திற்கு விடப்பட்டது. (ரூ. 4.9 கோடிக்கு ) ஏலம் போனதாக தகவல் வெளியாகியுள்ளது.