உலகளவில் சமூகவலைதளங்கள் பயன்பாட்டில் பெரும் பங்கு வகிப்பது யூட்யூப் செயலி ஆகும். யூட்யூப் செயலியில் நாமே ஒரு சேனல் உருவாக்கி வீடியோக்கள் பதிவேற்றம் செய்யமுடியும் என்பதால் வாடிக்கையாளர்கள் இதனை பெரிதும் பயன்படுத்துகின்றனர். இந்த செயலியில் நேரலையும் வரமுடியும் என்பதால் நம் சேனலை பின்தொடரும் வாடிக்கையாளர்களுடன் நேரடியாக உரையாட முடியும், தொடர்பில் இருக்கமுடியும்.
இதுபோக நாம் தனி அகவுண்ட் வைத்து வீடியோக்களை லைக், அதில் பின்னூட்டம் செய்யமுடியும், அதனை பகிரவும் முடியும். இந்த அகவுண்ட் இரு வகையாக யூட்யூப் நிறுவனம் கையாளுகிறது. அதாவது சாதாரண அகவுண்ட் மற்றும் ப்ரீமியம் அகவுண்ட் ஆகும். சாதாரண கணக்கு வைத்திருப்பவர்களுக்கு கட்டணம் எதுமில்லை. ஆனால் வீடியோக்கள் இடையே வரும் விளம்பரங்களை கட்டாயம் காண வேண்டும், அதில் வரும் விளம்பர வருமானம் யூட்யூப் நிறுவனத்திற்கு போய்சேரும். ப்ரீமியம் கணக்கு வைத்திருப்போர் மாதச் சந்தா செலுத்த வேண்டும். அவர்களுக்கு பல சலுகைகள் உண்டு. அதாவது வீடியோக்கள் மத்தியில் வரும் விளம்பரங்ளை அவர்கள் அவசியம் பார்க்கத் தேவையில்லை. ஸ்கிப் என்ற வசதி இருக்கும்.
யூட்யூப் நிறுவனம் ப்ரிமியம் பயணாளர்களை மேலும் அதிகப்படுத்தும் விதமாக, 4K வீடியோக்களை இனிமேல் ப்ரீமியம் பயணாளர்கள் மட்டுமே காணும் வசதி ஏற்படுத்த திட்டமிட்டுள்ளது. அதுபோக வீடியோக்கள் மத்தியில் வரும் விளம்பரங்களை 12 ஸ்கிப் வரை செய்து கொள்ளும் வசதியும் ஏற்படுத்தப்படும் என்று அறிவித்துள்ளது.