2025 முதல் 2027 என 3 ஆண்டுகளுக்கான ஐபிஎல் தொடர் அட்டவணையை பிசிசிஐ வெளியிட்டுள்ளது.
இந்திய அணி தற்போது பார்டர் – கவாஸ்கர் கோப்பை தொடரில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக விளையாடி வருகிறது. முதல் டெஸ்ட் போட்டி இன்று தொடங்கிய நிலையில், ஐபிஎல் தொடருக்கான அட்டவணையை பிசிசிஐ வெளியிட்டுள்ளது. மூன்று ஆண்டுகளுக்கான ஐபிஎல் தொடர் அட்டவணையை பிசிசிஐ வெளியிட்டுள்ளது.அதன்படி
அதன்படி 2025ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் போட்டிகள் மார்ச் 14ஆம் தேதி தொடங்கி மே 25ஆம் தேதி வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 2026ஆம் ஆண்டு மார்ச் 15ஆம் தேதி தொடங்கி மே 31ஆம் தேதி வரையும், 2027ஆம் ஆண்டு மார்ச் 14ஆம் தேதி ஐபிஎல் தொடர் தொடங்கி மே 30ஆம் தேதி வரை நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.