கடலூர் சிப்காட்டில் ரசாயன நீர் டேங்க் வெடித்து விபத்து .

அரசியல் சிறப்பு செய்திகள் தமிழ்நாடு போராட்டம்/ கலவரம் விபத்துகள்

கடலூர் அருகே உள்ள சிப்காட் சாயப்பட்டறை தொழிற்சாலையில், ரசாயன நீர் கொண்ட ஒரு டேங்கர் வெடித்து விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த வெடிப்பில் 6 லட்சம் லிட்டர் ரசாயன நீர் வெளியே வந்ததால், அருகிலுள்ள வீடுகளில் ரசாயன நீர் புகுந்து, பொதுமக்களுக்கு வாந்தி மற்றும் மயக்கம் ஏற்படுத்தியுள்ளது. இதனால் 20க்கும் மேற்பட்டோர் கடலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மக்கள் கண்எரிச்சல், வாந்தி மற்றும் மயக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதற்கான எதிர்ப்பு நடவடிக்கையாக, கடலூர் – சிதம்பரம் சாலையில் மக்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கடலூர் மாவட்டத்தின் முதுநகர் அருகே உள்ள சிப்காட்டில் பல தனியார் தொழிற்சாலைகள் செயல்பட்டு வருகின்றன. இந்த பகுதியில் உள்ளூர் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து பல தொழிலாளர்கள் வேலை செய்கிறார்கள். இதற்கிடையில், முதுநகர் அருகே உள்ள குடிகாடு பகுதியில் ஒரு தனியார் சாயத் தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது, இதில் 100க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றுகிறார்கள். இந்த தொழிற்சாலையில் உள்ள 6 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட சாயக்கழிவு பாய்லர் அதிக வெப்பம் காரணமாக நள்ளிரவு வெடித்து விபத்துக்குள்ளானது. இதனால் அருகிலுள்ள குடிகாடு கிராமத்தில் சாயக்கழிவு ஆறாக பெருக்கெடுத்து ஓடியது, இதனால் அப்பகுதியில் வசிக்கும் மக்களுக்கு மூச்சுத்திணறல் மற்றும் கண் எரிச்சல் ஏற்பட்டது. இதுகுறித்து தகவல் பெற்ற காவல் மற்றும் தீயணைப்புத்துறையினர் உடல்நலம் பாதிக்கப்பட்ட 20க்கும் மேற்பட்டவர்களை மீட்டு கடலூர் அரசு மருத்துவமனையில் அனுப்பி வைத்தனர். மேலும், அப்பகுதியில் வசிக்கும் மக்களை உடனடியாக வெளியேற்றினர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *