எலக்ட்ரிக் வாகனங்களுக்கான சார்ஜிங் நிலையங்களை நெடுஞ்சாலைகளில் அமைக்க ஒன்றிய அரசு திட்டம்.

அரசியல் இந்தியா இயற்க்கை கண்டுபிடிப்பு சிறப்பு சுற்றுச் சூழல் செய்திகள் தமிழ்நாடு பொருளாதாரம்

மின்சார வாகனங்களுக்கு சார்ஜிங் நிலையங்களை நெடுஞ்சாலைகளில் அமைக்க ஒன்றிய அரசு திட்டமிட்டுள்ளது. அதி விரைவுச்சாலை மற்றும் பேருந்து நிலையங்களில் அதிக திறன் கொண்ட சார்ஜிங் நிலையங்களை நிறுவுவதற்கான முடிவை எடுத்துள்ளது. 360 கிலோ வாட் திறன் கொண்ட சார்ஜிங் நிலையங்கள் நெடுஞ்சாலைகளில் அமைக்கப்படவுள்ளன, இதன் மூலம் வாகனங்களுக்கு 15 நிமிடங்களில் சார்ஜ் செய்ய முடியும். ஜாகுவார் மற்றும் பென்ஸ் போன்ற மின்சார வாகனங்களுக்கு சார்ஜிங் செய்யும் வசதியுடன் இந்த நிலையங்கள் அமையவுள்ளன. மேலும், நாடு முழுவதும் 25 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் 68 நகரங்களில் 2,877 சார்ஜிங் நிலையங்களை அமைக்க நெடுஞ்சாலை அமைச்சகம் அனுமதி வழங்கியுள்ளது. மின்சார வாகனங்களின் பயன்பாட்டை ஊக்குவிக்க, ஒன்றிய அரசு நெடுஞ்சாலைகளில் சார்ஜிங் நிலையங்களை அமைக்க திட்டமிட்டுள்ளது. இந்தியாவில் மின்சார வாகனங்களின் பயன்பாட்டை அதிகரிக்க தேவையான உள்கட்டமைப்பை மேம்படுத்த, ஒன்றிய அரசு 2015 இல் ஃபேம் இந்தியா (FAME India) திட்டத்தை உருவாக்கியுள்ளது. இந்தத் திட்டம் மூலம், மின்சார வாகனங்களின் பயன்பாட்டை ஊக்குவித்து, சுற்றுச்சூழல் பாதுகாப்பில் நல்ல பலன்களை அடைய முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *