விநாயகர் சிலைகள் அமைப்பதற்கும், கரைப்பதற்கும் விதிகளை தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் அறிவித்துள்ளது.

ஆன்மீகம் இந்தியா சிறப்பு செய்திகள் தமிழ்நாடு திருவிழாக்கள் மற்றும் நிகழ்வுகள் பண்டிகைகள் மற்றும் கொண்டாட்டங்கள்

விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி, விநாயகர் சிலைகள் அமைப்பதற்கும், கரைப்பதற்கும் தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் 6 கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

இந்நிலையில், விநாயகர் சதுர்த்தியை கொண்டாடும் போது, நீர்நிலைகளில் விநாயகர் சிலைகளை கரைக்க, மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரிய விதிகளை அனைவரும் பின்பற்ற வேண்டும் என வாரியம் நேற்று அறிவிப்பு வெளியிட்டது.

களிமண்ணால் செய்யப்பட்ட விநாயகர் சிலைகள் மட்டுமே தண்ணீரில் கரைக்க அனுமதிக்கப்படுகிறது. பிளாஸ்டர் ஆப் பாரிஸ், பிளாஸ்டிக், தெர்மாகோல் போன்ற மூலப்பொருட்களில் தயாரிக்கப்படும் சிலைகளை தண்ணீரில் கரைக்க அனுமதி இல்லை.

சிலைகள் செய்ய காய்ந்த பூ அல்லது வைக்கோல் போன்ற நச்சுத் தன்மையற்ற பொருட்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும். சிலைகள் பிரகாசிக்க மரங்களிலிருந்து இயற்கையான பிசின்களைப் பயன்படுத்தலாம்.

சிலைகளுக்கு தீங்கு விளைவிக்கும் அல்லது ரசாயன வண்ணப்பூச்சுகளை, எண்ணெய் வண்ணப்பூச்சுகள் பூசக்கூடாது.சிலைகளுக்கு எனாமல் அல்லது செயற்கை சாயங்கள் பூசக்கூடாது.

இயற்கை சாயங்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும். சிலைகளை அலங்கரிக்க இயற்கை துணிகள் மற்றும் வண்ணங்களால் செய்யப்பட்ட அலங்கார ஆடைகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.

தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரிய விதிமுறைகளின்படி தேர்வு செய்யப்பட்டு மாவட்ட நிர்வாகத்தால் அங்கீகரிக்கப்பட்ட இடங்களில் மட்டுமே விநாயகர் சிலைகள் கரைக்க வேண்டும் எனவும் அறிவிப்பு.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *