அமெரிக்காவிற்கு வெளியே உற்பத்தி செய்யப்படும் பிராண்டட் மருந்துகளுக்கு 100% வரி விதிப்பதாக டிரம்ப் அறிவித்துள்ளார். இது வரும் அக்டோபர் 1-ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.தனது ட்ரூத் சோசியல் வலைதள பக்கத்தில் கனரக லாரிகள், சமையலறை மற்றும் குளியலறை பொருட்களுக்கும் வரி விதிக்கப்படுவதாக டிரம்ப் அறிவித்துள்ளார்.கனரக வாகனங்களுக்கு 50% சமையலறை அலமாரி மற்றும் குளியலறையில் பொருத்தப்படும் பொருட்களுக்கு 50% வரி விதிக்கப்படுகிறது. அமெரிக்கா சந்தைக்கு மருந்துகளை ஏற்றுமதி செய்வதில் இந்தியா மிகப்பெரிய பங்கு வகிக்கிறது. இந்திய பொருட்களை இறக்குமதி செய்வதில் ஏற்கனவே 50% வரி விதித்துள்ளது அமெரிக்கா. ஒவ்வொரு ஆண்டும் அமெரிக்காவுக்கு சுமார் 12.7 பில்லியன் டாலர் மதிப்பிலான மருந்துகளை இந்தியா ஏற்றுமதி செய்கிறது.ஆனால், இந்த மருந்துகளில் பெரும்பாலானவை ஜெனரிக் மருந்துகள் ஆகும். வர்த்தக ஒப்பந்தம் ஏற்படவில்லையென்றால், டிரம்பின் வரிகள் காரணமாக ஜெனரிக் மருந்துகளை உற்பத்தி செய்யும் சில இந்திய நிறுவனங்கள் சந்தையை விட்டு வெளியேற வேண்டிய கட்டாயம் ஏற்படலாம் என நிபுணர்கள் கூறுகின்றனர்.இது அமெரிக்காவின் மருந்து தட்டுப்பாட்டை மேலும் மோசமாக்கும் என்று கூறப்படுகிறது.
