திருப்பூர் ஆத்துப்பாளையம் ஊரைச் சார்ந்த அலி தங்கப்பா சுமார் 15 ஆண்டுகளாக சவுதி அரேபியா ஜுபைல் பகுதியில் பணிபுரிந்து வந்த நிலையில் இவருக்கும் இவரின் நிறுவன உரிமையாளருக்கும் இடையில் ஏற்பட்ட பிரச்சனையின் காரணமாக கடந்த 13 ஆண்டுகளாக தாயகம் திரும்ப முடியாமல் பரிதவித்து வந்தார்.
இதை தவ்ஹீத் ஜமாத் மூலம் அறிந்த சவுதி அரேபியா கிழக்கு மண்டல NRTIA முதன்மைச் செயலாளர் மயிலாடுதுறை வெங்கடேசன் துணை அமைப்பாளர் திருச்சி ஆரிப் மக்பூல் மற்றும் துறையூர் கமால் , கிளை பொறுப்பாளர் முகவை சீனி முகம்மது , மற்றும் குழுவினர் இணைந்து , இந்திய தூதரகத்தின் உதவியுடன் நேர்த்தியாக சட்டப் போராட்டம் நடத்தி அலி தங்கப்பா செலுத்த வேண்டிய பினைத் தொகையை சவுதி அரேபியா அரசின் உதவியுடன் ரத்து செய்து எவ்வித சிறை தண்டனையும் இன்றி அவரை பத்திரமாக தாயகம் அனுப்பி வைத்தனர்.