குறித்து புகார் அளித்த விஏஓ, அரிவாளால் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் வல்லநாடு அருகே உள்ள முறப்பநாடு கிராம நிர்வாக அலுவலராக லூர்து பிரான்ஸிஸ் பணியாற்றி வந்தார். இவர், கடந்த சில நாட்களுக்கு முன்பு தாமிரபரணி ஆற்றுப் பகுதியில் ரோந்து சென்றிருந்தபோது, ராமசுப்பு என்பவர் தனது இருசக்கர வாகனத்தில் ஆற்று மணலை கடத்தி சென்றதாக கூறப்படுகிறது. இதனைப் பார்த்த விஏஓ லூர்து பிரான்சிஸ், உடனடியாக முறப்பநாடு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
இந்த நிலையில், இன்று லூர்து பிரான்சிஸ் தனது அலுவலகத்தில் வழக்கமான பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது, திடீரென அலுவலகத்திற்குள் புகுந்த இருவர், அவரை சரமாரியாக அரிவாளால் வெட்டினர். இதில் படுகாயம் அடைந்த அவர், நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்ட நிலையில், சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த முறப்பநாடு போலீசார், ஒருவரைப் பிடித்து ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதனிடையே, தூத்துக்குடி ஆட்சியர் செந்தில்ராஜ், காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் ஆகியோர் நெல்லை மருத்துவமனைக்கு நேரில் சென்றனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஆட்சியர் செந்தில்ராஜ், குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை பெற்றுத்தரப்படும் என கூறினார்.