விசா விதிமீறல் மற்றும் சட்டவிரோத குடியேற்றம் காரணமாக வெளிநாடுகளில் இருந்து இந்தியர்கள் தொடர்ந்து தாயகம் திருப்பி அனுப்பப்பட்டு வருகின்றனர். இந்த ஆண்டில் மட்டும் உலகம் முழுவதும் 81 நாடுகளில் இருந்து மொத்தம் 24,600 இந்தியர்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர். இதில் சவுதி அரேபியா முதலிடத்தில் உள்ளது.கடந்த ஒரு ஆண்டில் சவுதி அரேபியாவிலிருந்து மட்டும் 11,000க்கும் அதிகமான இந்தியர்கள் இந்தியாவிற்கு திரும்பியுள்ளனர். இதனைத் தொடர்ந்து அமெரிக்காவிலிருந்து 3,800 பேர் வெளியேற்றப்பட்டுள்ளனர். இது கடந்த 15 ஆண்டுகளில் பதிவான அதிகபட்ச எண்ணிக்கையாகும்.அதேபோல் மியான்மரிலிருந்து 1,591 பேர், மலேசியாவிலிருந்து 1,485 பேர் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்திலிருந்து 1,469 பேர் இந்தியாவிற்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர். மேலும் பிரிட்டனில் இருந்து 170 இந்திய மாணவர்கள் வெளியேற்றப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

