உலக ரேபிட் செஸ் சாம்பியன்ஷிப் போட்டிகள் கத்தாரின் தோஹா நகரில் நடைபெற்று வருகின்றன. போட்டியின் முதல் நாள் நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில் மொத்தம் 5 சுற்றுகள் நடத்தப்பட்டன.
இந்த போட்டிகளில் தமிழகத்தை சேர்ந்த உலக செஸ் சாம்பியன் குகேஷ், இந்திய கிராண்ட் மாஸ்டர் அர்ஜுன் எரிகைசி, நார்வே நாட்டின் உலக நம்பர் 1 வீரர் மேக்னஸ் கார்ல்சன் ஆகியோர் தலா 4.5 புள்ளிகள் பெற்று முதலிடத்தில் உள்ளனர்.இதற்கு கூடுதலாக, பிரான்ஸ் கிராண்ட் மாஸ்டர் மேக்சிமே வஷியர் லாக்ரேவ் மற்றும் ரஷ்ய கிராண்ட் மாஸ்டர் விளாடிஸ்லேவ் ஆர்டெமிவ் ஆகியோரும் 4.5 புள்ளிகள் பெற்று முதலிடத்தை பகிர்ந்து கொண்டுள்ளனர்.ஆனால், நடப்பு உலக ரேபிட் செஸ் சாம்பியனான ரஷ்ய வீரர் வோலோடார் முர்ஸின் முதல் சுற்றிலேயே தோல்வி அடைந்ததால், இதுவரை வெறும் 2 புள்ளிகள் மட்டுமே பெற்றுள்ளார்

