2025ஆம் ஆண்டின் முதல் ஆறு மாதங்களில், இந்தியாவில் இருந்து ரஷ்யாவின் மாஸ்கோவுக்கு பயணம் செய்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 40% உயர்ந்துள்ளது.இந்த காலகட்டத்தில் மொத்தம் 40,800 இந்தியர்கள் மாஸ்கோவை சுற்றி வந்துள்ளனர்.சிஐஎஸ் (CIS) அமைப்புக்கு உட்படாத நாடுகளில் இருந்து மாஸ்கோவுக்கு அதிகம் வருகை தரும் பயணிகளில் இந்தியா இரண்டாவது இடத்தில் உள்ளது.2025 ஜனவரி முதல் ஜூன் மாதம் வரை, சிஐஎஸ் வெளியே இருந்து 5 லட்சத்துக்கும் மேற்பட்ட வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் மாஸ்கோவுக்கு வந்துள்ளனர் — இது 2024ம் ஆண்டை விட 10% அதிகம்.ஆசிய நாடுகளில் இருந்து மாஸ்கோவுக்கு பயணம் செய்யும் ஆர்வம் அதிகரித்து வருகிறது. இதனால் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை தொடர்ந்து உயர்ந்து வருகிறது.மாஸ்கோ தற்போது உலகளவில் சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் முக்கிய நகரமாக வளர்ந்து வருகிறது.இ-விசா வசதி, கலாச்சார விழாக்கள், மற்றும் சுற்றுலா நிகழ்ச்சிகள் ஆகியவை மாஸ்கோவின் பிரபலத்தை அதிகரித்து வருவதாக மாஸ்கோ நகர சுற்றுலா குழு தெரிவித்துள்ளது.

