ஷார்ஜா புத்தக கண்காட்சியில் அரபு மொழியில் திருக்குறள் வெளியீடு .

இந்தியா உலகம் சிறப்பு செய்திகள் தமிழர் விளையாட்டு தமிழ்க்கல்வி தமிழ்நாடு புலம் பெயர்ந்த தமிழர்கள்

உலகப் புகழ் பெற்ற திருக்குறள் இப்போது அரபு மொழியில் வெளியிடப்பட்டுள்ளது.இந்த மொழிபெயர்ப்பை சென்னைப் பல்கலைக்கழகத்தின் அரபுத்துறைத் தலைவர் பேராசிரியர் ஏ. ஜாகிர் ஹுசைன் செய்துள்ளார்.இந்த நூல் ஷார்ஜா சர்வதேச புத்தகக் கண்காட்சியில் வெளியிடப்பட்டது.விழாவில் ஷார்ஜா காவல்துறை அதிகாரி சுமையா அலி முஹைன் ஹசன் அல் ஹாஷ்மி தலைமை விருந்தினராக கலந்து கொண்டு புத்தகத்தை வெளியிட்டார்.முதல் பிரதியை அமீரக பிரமுகர் அப்துல்லா அலீ ராஷித் முஹம்மது அல் யமாஹி பெற்றுக்கொண்டார்.மேலும், அமீரக நாவலாசிரியர்கள் அஸ்மா அல் சர்வூனி, பத்ஹியா அல் நிம்ர்,ஈமான் கலாச்சார மையத் தலைவர் டாக்டர் பி. எஸ். எம். ஹபிபுல்லா,பொதுச்செயலாளர் ஹமீத் யாசீன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.நிகழ்ச்சியை ஆர்.ஜே. சாரா தொகுத்து வழங்கினார்.பேராசிரியர் ஜாகிர் ஹுசைன் உரையாற்றும்போது,“அரபு பேசும் மக்களிடம் திருக்குறள் மொழிபெயர்ப்பு பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.திருக்குறளை உலகின் அனைத்து மொழிகளிலும் கொண்டு சேர்க்க வேண்டும்” என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *