ராஜ்கமல் நிறுவனம் தயாரித்து கமல்ஹாசன் நடிக்கும் புதிய படத்தை பிரபல இயக்குநர் வினோத் இயக்குகிறார் – அறிவிப்பு வெளியானது

இசை இந்தியா சினிமா செய்திகள் தமிழ்நாடு நிகழ்வுகள் மற்றவை முதன்மை செய்தி வரும் நிகழ்ச்சிகள்

கமல்ஹாசன் நடிக்கும் KH233 வது படத்தின் அப்டேட் வெளியாகி ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.
இந்தியன் 2 படத்தை அடுத்து நடிகர் கமல்ஹாசன் ஹெச்.வினோத் இயக்கத்தில் நடிப்பதாக கடந்த சில வாரங்களாக தகவல்கள் வெளியாகி வந்தன. இந்நிலையில், அந்த படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு தற்போது வெளியாகி இருக்கிறது.
இந்நிலையில் தற்போது வெளியான அறிவிப்பில் கமல் தீப்பந்தம் ஏந்தியபடி இருக்கும் புகைப்படம் ஒன்றும் இடம்பெற்றுள்ளது. இந்தப் படத்தை நடிகர் கமல்ஹாசனின் ராஜ்கமல் நிறுவனம் மகேந்திரன் உடன் இணைந்து தயாரிக்க உள்ளது. ராஜ்கமல் நிறுவனத்தின் 52ஆவது படமாக இப்படம் உருவாகிறது.
மேலும், அந்த வீடியோவில், Rise to Rule என குறிப்பிடப்பட்டு இருப்பதால், படத்தின் கதை என்னவாக இருக்கும் என பெரிய எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது. இந்த அறிவிப்பு கமல்ஹாசன் – ஹெச்.வினோத் இருவரது ரசிகர்களையும் உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *