காவிரி நீர் விவகாரம் தொடர்பாக மத்திய அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத்தை துரை முருகன் சந்தித்து பேசியுள்ளார்.
தமிழ்நாட்டிற்கு கர்நாடக அரசு உரிய நீரை திறக்க உத்தரவிட வேண்டும் என மத்திய அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத்திடம் வலியுறுத்தியுள்ளதாக, நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
மத்திய அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத்தை, டெல்லி அசோகா சாலையில் உள்ள அவரது இல்லத்தில் தமிழ்நாடு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் நேரில் சந்தித்து பேசினார். அதன் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் துரைமுருகன், கடந்த மாதம் காவிரியிலிருந்து தமிழகத்துக்கு வரவேண்டிய 9.22 டிஎம்சி தண்ணீரை கர்நாடக அரசு வழங்கவில்லை எனவும் இதனால் பயிர்கள் தண்ணீரின்றி கருகும் நிலை உருவாகியுள்ளதாகவும் தெரிவித்தார். மேகதாதுவில் அணை கட்ட கர்நாடகா அரசு தீவிர முயற்சி மேற்கொண்டு வரும் நிலையில் துரைமுருகன் மத்திய அமைச்சரை சந்தித்துள்ளார்.

