நியூசிலாந்தானது பசிபிக் பெருங்கடலின் தென்மேற்குப் பகுதியில் அமைந்துள்ளது. தீவு நாடான நியூசிலாந்தில் இன்று சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 6.3 ஆக பதிவாகியுள்ளது.
இது தொடர்பாக நியூசிலாந்தின் தேசிய அவசரகால மேலாண்மை முகமையின் தகவலின் படி , “இந்த நிலநடுக்கம் 6.3 ரிக்டர் அளவாக பதிவாகியுள்ளது. நிலநடுக்கம் ஏற்பட்ட உடனேயே, கடலோரப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் உயரமான இடங்களுக்குச் செல்லுமாறு அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர். மில்ஃபோர்ட் சவுண்ட் முதல் புய்செகுர் பாயிண்ட் வரையிலான நியூசிலாந்தின் தெற்குத் தீவின் மேற்குக் கடற்கரைக்கு சுனாமி எச்சரிக்கை தொடர்ந்து அமலில் உள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

