இராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வாரத்தில், தமிழ்நாடு பாஜகதலைவர் அண்ணாமலை மேற்கொள்ள உள்ள என் மண், என் மக்கள் பிரச்சாரத்தை மத்திய உள்துறை அமித் ஷா தொடங்கி வைத்தார்.
முன்னதாக, தமிழகத்திற்கு வருகை தந்துள்ள உள்துறை அமைச்சர் அமித்ஷாவிற்கு, மதுரை விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அதன்பின் , ஹெலிகாப்டர் மூலம் ராமேஸ்வரம் வந்தடைந்தார்.
பின்பு, பிரதமர் நரேந்திர மோடி முன்வைத்த மாற்றத்தினை மாநிலத்தின் ஒவ்வொரு தொகுதிக்கும் எடுத்துச் செல்லும் வகையில் தமிழ்நாடு பாஜக நடத்தும் “என் மண் என் மக்கள்” பொது கூட்ட மேடைக்கு வந்தடைந்தார். இந்த பொதுக்கூட்டத்தில் அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி.கே.வாசன், புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி, தமிழக மக்கள் முன்னேற்ற கழகத் தலைவர் ஜான் பாண்டியன், தேமுதிக கட்சி உள்ளிட்ட கூட்டணி கட்சி பிரதிநிதிகள் பங்கேற்றனர்.
சுமார், 10 ஆயிரம் பேர் அமரும் வகையில் மாபெரும் வகையில் பொதுக் கூட்டம் மேடை ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. தொடக்க விழா பொதுக் கூட்டத்திற்கு பின் அண்ணாமலை நடைப்பயணத்தை அமித்ஷா கொடியசைத்து தொடங்கி வைக்கிறார். பொதுக்கூட்ட மேடை முதல் இராமேஸ்வரம் கோவில் வரை 3 1/2 கிலோ மீட்டர் முதல் நாள் நடைப்பயணத்தை பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை மேற்கொள்ள உள்ளார்.

