மிரட்டும் மல்லி – பண்டிகை காலங்களில் எகிறும் பூக்களின் விலை

இந்தியா கடந்த நிகழ்ச்சிகள் கலை / கலாச்சாரம் செய்திகள் தமிழ்நாடு மண்மணம் மற்றவை வரும் நிகழ்ச்சிகள்

தமிழகத்தில் பண்டிகைகள், திருவிழாக்கள், முகூர்த்தங்கள், இதர சுப நிகழ்ச்சிகள் காலத்தில் பூக்களின் பயன்பாடு மிகவும் முக்கியம். இக்காலகட்டத்தில் சந்தர்ப்பத்தை பயன்படுத்தி விவசாயிகளும், வியாபாரிகளும் பூக்களின் விலையை வானுயரத்திற்கு உயர்த்துவார்கள். இது காலகாலமாக நடக்கும் செயல் தான்.
இந்தாண்டும் பூக்களின் விலை மிகக் கடுமையாக உயர்ந்திருக்கிறது. ஆடி மாதம் முடிந்து ஆவணி மாதம் தொடங்கிய நிலையில் இந்த மாதம் முகூர்த்தத் தினங்கள் மிகவும் அதிகம். முகூர்த்த தினங்களில் பூக்களின் தேவை மிக அதிகமாக இருக்கும். இந்தாண்டு மூகூர்த்த தினங்கள் அடுத்தடுத்து வருவதால் பூக்களுளின் தேவையும் நினைத்ததை விட அதிகம். ஆனால் இந்தாண்டு மழைப் பொழிவு அதிகம் என்பதால் பூக்களின் உற்பத்தி வழக்கத்தை விட மிகக் குறைவாக இருக்கிறது. விளச்சல் குறைவு, தேவை அதிகம் என்று செல்லுகையில் பூக்களின் விலையில் அது எதிரொலிக்கத் தொடங்கியிருக்கிறது.
மதுரை மாட்டுத்தாவணி பூச்சந்தையில் மல்லிகைப்பூ ஒரு கிலோவின் விலை 3000 ரூபாய் என்ற நிலையில் விற்கப்படுகிறது. கடந்த வாரம் 2000 முதல் 2500 ரூபாய்க்கு விற்கப்பட்ட மல்லியின் விலை மேலும் அதிகரித்து 3000 ரூபாய்க்கு சென்றிருக்கிறது. பிச்சிப்பூ, முல்லையின் விலை எண்ணிப் பார்க்கமுடியாத அளவிற்கு 1000 ரூபாய் கிலோ ஒன்றிக்கு விற்கப்படுகிறது.
செப்டம்பர் முதல் வாரம் அதிக மூகூர்த்தங்கள், ஓனம் பண்டிகை வருவதால் மக்கள் பூக்கள் வாங்கியே ஆக வேண்டும் என்றக் கட்டாயத்தில் பூக்களின் விலை மக்களை மிரட்டுகிறது.
.

Leave a Reply

Your email address will not be published.