இந்தியா சுதந்திர தினத்தை கொண்டாடும் வகையில் 15ஆம் தேதி வரை அனைவரின் இல்லங்களிலும் மூவர்ண கொடியேற்றுங்கள்; பிரதமர் மோடி வேண்டுகோள்

அரசியல் இந்தியா கடந்த நிகழ்ச்சிகள் செய்திகள் நிகழ்வுகள் மற்றவை முதன்மை செய்தி வரும் நிகழ்ச்சிகள்

சுதந்திர தினத்தை கொண்டாடும் வகையில் ஒவ்வொரு வீட்டிலும் மூவர்ண கொடி ஏற்றுங்கள் நாட்டு மக்களுக்கு மோடி அழைப்பு விடுத்துள்ளார். நாடு சுதந்திரம் பெற்று 75 ஆண்டுகள் நிறைவு பெறுவதை குறிக்கும் வகையில் ‘சுதந்திர தின அமுத பெருவிழா’ என்ற பெயரில் பல்வேறு செயல்பாடுகளை ஒன்றிய அரசு முன்னெடுத்து வருகிறது. அதன்படி கடந்தாண்டில் பிரதமர் மோடி, ஒவ்வொரு வீட்டிலும் மூவர்ண கொடி என்ற இயக்கத்தை ெதாடங்கி வைத்தார். அதன்படி இந்தாண்டில் நாளை முதல் வரும் 15ம் தேதி வரை வீடுகளில் தேசிய கொடியை ஏற்றி வைக்கும்படி டுவிட்டரில் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மேலும்,தங்களது வீடுகளில் தேசிய கொடியை பறக்க விட்டு அதன் படங்களை சமூக வலைதளங்களில் பதிவிடுமாறு கேட்டு கொண்டுள்ளார். இதனிடையே ஒன்றிய அமைச்சர்கள் அனுராக் தாகூர் மற்றும் கிஷண் ரெட்டி ஆகியோர், சுதந்திர தினத்தை முன்னிட்டு நடந்த பைக் பேரணியில் பங்கேற்க, துணை ஜனாதிபதி ஜக்தீப் தன்கர், கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *