சின்ன தல சுரேஷ் ரெய்னா கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு

இந்தியா செய்திகள் விளையாட்டு

இந்திய கிரிக்கெட்டின் நம்பிக்கை நட்சத்திரம் சுரேஷ் ரெய்னா ஒட்டுமொத்த கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வுப் பெறுவதாக அறிவித்திருக்கிறார். சர்வதேப் கிரிக்கெட் போட்டிகளில் முக்கிய வீரராக சுரேஷ் ரெய்னா அனைவராலும் அறியப்பட்டவர். அனைத்து வகையான கிரிக்கெட் போட்டிகளிலும் சதம் அடித்த முதல் வீரர் என்ற பெருமைக் கொண்டவர் சுரேஷ் ரெய்னா அவர்கள்.
ஐபிஎல் போட்டிகளில் சென்னை அணி சார்பாக விளையாடிய சுரேஷ் ரெய்னா சென்னை ரசிகர்களால் பெரிதும் கொண்டாடப்பட்டவர். தோனியை “தல” என்று அழைக்கும் சென்னை ரசிகர்கள் ரெய்னாவை “சின்ன தல” என்று அன்போடு அழைக்கப்படுகிறார். சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணிக்கு மிக முக்கியமான ஆட்டக்காரராக விளங்கியவர்.
டி20 கிரிக்கெட் போட்டியில் 8000 ரன்களை கடந்த முதல் வீரர் என்ற பெருமைக்குரியவர். ஐபிஎல் தொடரில் 5000 ரன்களை கடந்த முதல் வீரர். ஐபிஎல் தொடரில் அதிகம் கேட்ச் பிடித்த வீரர், க்ரிஷ் கெயிலுக்கு அடுத்தபடியாக அதிகம் சிக்ஸர்கள் அடித்த வீரர் என்ற பெருமையும் இவருக்கு உண்டு. சாம்பியன்ஸ் லீக் போட்டியில் அதிக ரன்கள் எடுத்த வீரர், அதிக அரை சதமடித்த வீரர் என்ற பெருமைக்குரியவர்.
கடந்த 2020ம் ஆண்டு அனைத்து சர்வதேச போட்டிகளிலும் ஓய்வுப் பெறுவதாக அறிவித்தார். 2022ல் ஐபிஎல் மற்றும் உள்ளூர் போட்டிளிலும் இருந்து ஓய்வுப் பெறுவதாக அறிவித்துள்ளார். இனி சிஎஸ்கே சார்பாக சின்ன தல சுரேஷ் ரெய்னா விளையாடப் போவதில்லை என்பது சென்னை ரசிகளுக்கு வருத்தமான செய்தியாகும்.

Leave a Reply

Your email address will not be published.