ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி தொடரில் ஜப்பானை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறி இந்திய அணி அசத்தல்

இந்தியா உலகம் கடந்த நிகழ்ச்சிகள் செய்திகள் தமிழ்நாடு நிகழ்வுகள் மலேசியா மற்றவை முதன்மை செய்தி வரும் நிகழ்ச்சிகள் விளையாட்டு ஜப்பான்

ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி தொடரில் ஜப்பானை வீழ்த்தி இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது இந்திய அணி.
சென்னையில் நடைபெற்று வரும் ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி தொடரின் அரையிறுதிப் போட்டிகள் சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஹாக்கி விளையாட்டு அரங்கில் நடைபெற்று வருகிறது. முதல் அரையிறுதி ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் தென்கொரியா- மலேசியா அணிகள் மோதின.
இந்த ஆட்டத்தில் தொடக்கம் முதல் சிறப்பாக விளையாடிய மலேசிய அணி 6-2 என்ற கோல்கணக்கில் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.
இரண்டாவது அரையிறுதி ஆட்டத்தில் இந்திய அணி ஜப்பானுடன் மோதியது. ஆட்டத்தின் முதல் பாதியில் இரு அணிகளும் கோல் எதுவும் அடிக்கவில்லை. இரண்டாவது பாதியில் இந்திய வீரர்கள் 5 கோல் அடித்து அசத்தினர்.
இறுதியில், இந்திய அணி 5-0 என்ற கோல் கணக்கில் ஜப்பானை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. இந்நிலையில் நாளை இரவு நடைபெறும் இறுதிப் போட்டியில் மலேசியாவை எதிர்கொண்டு இந்திய அணி விளையாட உள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published.